நம்பியூர் அருகே வரப்பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் சாவகட்டு பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் அவருக்கு தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது அறிவித்துள்ளது. இவரை மாணவர்கள் பெற்றோர்கள் சக ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறேன் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் சென்னை போன்று ஆக்கமுடன் செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் இந்த விருந்து மேலும் எங்களை ஊக்கப்படுத்தும் நீ வரும் காலங்களிலும் சிறப்பாக செயல்படுவேன்.இந்த விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
மாணவர்களிடையே தமிழ் மொழியை ஊக்கப்படுத்தி பரப்பரை செய்து வந்த காரணத்திற்காக தமிழ் வளர்ச்சித் துறை செந்தமிழ் சொற்ப பரப்பியல் அகர முதலிய திட்ட இயக்கத்தின் மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு தூய தமிழ் பற்றாளர் விருது தமிழ் ஆசிரியர் கந்தசாமிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.