ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே ஆலத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட உப்புக்காரபள்ளம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ்.ஐ. கந்தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று குமார் என்ற குமாரவேல் (46) என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தனர்.
அப்போது தோட்டத்தில் பெரிய பிளாஸ்டிக் கேனில் 40 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து குமாரவேலை கைது செய்தனர். விசாரணையில் கள்ளச்சாராய ஊறலில் அதிக போதை தருவதற்காக போதைப் பொருள்களை கலந்திருந்தது தெரியவந்தது.