ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் மங்கரசு வளையபாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் வழுக்குப்பாறை என்ற இடத்தில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அங்கு சென்று சோதனை செய்தபோது சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி (வயது 51) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து கோபி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 4 லிட்டர் சாராயம் மற்றும் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.