திங்களூர் அருகே வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்

71பார்த்தது
திங்களூர் அருகே வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர், திங்களூர் பாண்டியம்பாளையம் கிளை வாய்க்கால் மதகு அருகே ஆண் பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் திங்களூர் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை பார்வையிட்டனர். அப்போது பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் இறந்து 2 அல்லது 3 நாட்கள் ஆகியிருக்கும் என்று கூறப்படுகிறது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 35 முதல் 45 வயது இருக்கும். யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி உயிரிழந்தார்? என்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி