எம். ஜி. ஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள்

56பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்
முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான
கே. ஏ. செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் கழக தொண்டர்கள் மகளிர் அணியினர் 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் எம்ஜியாரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தினை அனுசரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையத்தில் நகர செயலாளர் பரிணியோ கணேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் சிறப்பு கலந்துகொண்டு எம்ஜியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்ச்சியில் மற்றும் நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி