ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி ஏரங்காட்டூர் தண்ணீர் பந்தல் கருப்புசாமி கோவில் அருகே மது விற்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் மொபட்டில் வைத்து மது விற்றுக்கொண்டிருந்தார். இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் டி.ஜி.புதூர் சரோஜினி வீதியைச் சேர்ந்த கருணாமூர்த்தி (வயது 50) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மது விற்க பயன்படுத்தப்பட்ட மொபட், 96 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.