நிரம்பும் நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை

69பார்த்தது
நிரம்பும் நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை
டி. என். பாளையம் அருகே கொங்கர்பாளையம் ஊராட்சி குன்றி மலையடிவாரத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை மூலம் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2, 500 ஏக்கர் விலை நிலம் பாசன வசதி வருகிறது.

அணையின் மொத்த கொள்ளளவு 41. 75 அடியாக உள்ள நிலையில், அணை நீர்மட்டம் தற்போது 40. 48 அடியாக உள்ளது‌. அணை நிரம்பி வழிய சுமார் 1 அடியே உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தால் குண்டேரிப்பள்ளம் அணை விரைவில் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், வினோபா நகர், கொங்கர்பாளையம் வாணிப்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளங்களை ஒட்டி வாழும் பொதுமக்கள் தாழ்வான பகுதியில் இருந்து மேடான பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் கொங்கர்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி