பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இலவச திருமண திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முக்கிய கோயில்களில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகின்றது. இத்திட்டத்தின்படி மணமக்களுக்கு 4 கிராம் தங்கம் உள்பட ரூ. 60 ஆயிரம் செலவில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்படுகின்றது. இந்நிலையில் வருகின்ற 21ம் தேதி பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நடைபெற உள்ள இலவச திருமண திட்டத்தில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும்மாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.