ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிச்செவியூர், காளியப்பம் பாளையம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (56). விவ சாயி. இவர் ஆடுகளை தோட்ட வீட்டில் கட்டி வளர்த்து வருகிறார்.
நேற்று ஆட்டு கொட்டகையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீச்சியடித்து தீயை அணைத்தனர்.
விசாரணையில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. நம்பியூர் போலிசார் விசாரித்து வருகிறார்கள்.