பெருந்துறை வட்ட மின்சார வாரியத்தின் சார்பில் நுகர்வோருக்கான காலாண்டு கூட்டம், பெருந்துறை, துடுப்பதி ரோடு, மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு செயற்பொறியாளர் வாசுதேவன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றதுடன், நுகர்வோர் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமாகவும் விரிவாகவும் பதிலுரைத்தார்.
பெருந்துறை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் பல்லவி பரமசிவன் நன்றி கூறினார்.
நிகழ்வில் உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், முருகன், அலுவலகர்கள், துணைத்தலைவர் மாரியப்பன், செயலாளர் பழனிச்சாமி, நிர்மலா, பாஸ்கரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.