கோபி போலீசார் கல்ராமணி பிரிவு அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பைக்கில் வந்த மூன்று பேரை மடக்கி விசாரித்தனர். மூன்று பேரும் கோபி சிறுவலூர் நம்பியூர் கடத்தூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டவர்கள் என விசாரணையில் தெரிந்தது. கோபியை சேர்ந்த கவின் 19 ரஞ்சித் குமார் 21 ஹரி பிரசாத் 20 எனவும் தெரியவந்தது. அவர்களிடம் எட்டு வெள்ளாடு இரண்டு சேவல் மற்றும் 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மூன்று பேரும் சத்தி அருகே தனியார் கல்லூரியில் படித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.