ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த உக்கரம், கேத்தம்பாளையம் பகுதியின் புதிதாக ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கடை நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது திறப்பு விழாவையொட்டி ரேஷன் கடையின் முன்பு பந்த அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த பந்தல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபதில் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பந்தலுக்கு தீ வைத்ததாக அந்த பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரை கைது செய்தனர்.