நம்பியூர் அருகே எம்மாம்பூண்டி பகுதியில் தீ விபத்து
நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி காலனி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி 42 இவரது கணவர் மாகாளி இறந்துவிட்ட நிலையில் பேரன் ஸ்ரீ சக்தி 7, பேத்தி குணா 3, இவர்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சரஸ்வதி வேலைக்கு சென்று விட்ட நிலையில் அவரது ஓட்டு வீட்டு முன்பு போடப்பட்டிருந்த கொட்டகையில் தீ பற்றி எரிந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் நம்பியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததனர்
சம்பவ இடத்திற்குச் சென்ற நம்பியூர் தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர்.
வரப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தியதில்சரஸ்வதியின் பேரன் ஸ்ரீ சக்தி தீப்பட்டியை எடுத்து விளையாடிய போது தீயை பற்ற வைத்தது தெரிந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதுமில்லை வீட்டில் உள்ள சில ஆயிரக்கான பொருட்கள் நாசமானது.