டி. என். பி. எஸ்சி குரூப் - 4 தேர்வு ஈரோட்டில் 194 மையங்களில் 57, 205 பேர் எழுதினர்
தமிழகத்தில் காலியாக உள்ள 6, 244 பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி. என். பி. எஸ். சி) மூலம் குரூப் - 4 தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வுக்காக 194 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இத்தேர்வினை மாவட்டத்தில் 57 ஆயிரத்து 205 பேர் எழுதினர். தேர்வு மையத்திற்குள் செல்போன், டிஜிட்டல் வாட்ச் போன்றவை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட வில்லை. கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தின் நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வர்கள் உள்ளே அனுமதித்தனர். காலை 9. 30 மணி முதல் மதியம் 12. 30 மணி நடந்தது. முன்னதாக தேர்வு துவங்கும் சில மணி நேரத்திற்கு முன்னதாக ஈரோடு மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையத்திற்கு எடுத்து வரப்பட்டது. தேர்வினை கண்காணிக்க 45 நடமாடும் குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு நடக்கும் 194 தேர்வு மையங்களில் 239 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.