What: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் கோபி நகர கிழக்கு மற்றும் மேற்கு கிளைகள் சார்பாக தியாகி திருப்பூர் குமரன் 121 வது பிறந்தநாள் விழா கோபி பேருந்து நிலையம் முன்பு இன்று (அக்.,4) நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்து கொண்டு திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்பி சத்திய பாமா நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி கிழக்கு கிளை தலைவர் காளீஸ்வரன், மேற்கு கிளை தலைவர் கேசவன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.