ஈரோடு: வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட2 பேர் தூக்கிட்டு தற்கொலை

81பார்த்தது
ஈரோடு: வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட2 பேர் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த நல்லூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் ( 27). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், கடந்த 13ம் தேதி மது அருந்த, தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்ததாக தெரிகிறது. அப்போது, நீ வேலைக்கு போயிட்டு வரும் போது நான் இருக்க மாட்டேன் என ராம்குமார் கூறியுள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் கிருஷ்ணசாமி வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்தபோது, சொன்னபடியே ராம்குமார் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, கிருஷ்ணசாமி அளித்த புகாரின் பேரில், புளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று, திருப்பூர் மாவட்டம் அலகுமலை நாகேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (55). இவர் தனது மனைவியை 18 ஆண்டுகளுக்கு முன் விவகாரத்து செய்து விட்டு, ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சீதாலட்சுமி புரத்தில் இளாகி என்பவருடன் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள தனது உறவினர் ஒருவர் உடல் நிலை சரியில்லை என்றும் அவரை பார்க்க போவதாகவும் இளாகி கூறியுள்ளார். இதனால் போக கூடாது என மூர்த்தி மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாகும் ஏற்பட்டுள்ளது. இதில் அதிருப்தியடைந்த மூர்த்தி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, மூர்த்தியின் மகள் மோனிசா அளித்த புகாரின் பேரில், கோபி போலீசார் விசாரித்து வருகின்றனர்.