வாய்க்காலில் கை கழுவ சென்ற இளைஞர் பலி

7165பார்த்தது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சி கோவில் சாலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கவின். இவர் கோவையில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் வீட்டிற்கு வந்த கவின் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஈரோடு செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் கீழ் பவானி வாய்க்கால் அருகே உணவு அருந்த சென்றுள்ளார். அப்போது இளைஞர் கவின் வாய்க்காலில் கை கழுவதற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக கவின் தவறி வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் நீச்சல் தெரியாததால் கவின் தண்ணீர் மூழ்கியுள்ளார். இதையடுத்து அவரது நண்பர்கள் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராடி கவினை சடலமாக மீட்டு பெருந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்க்காலில் கை கழுவதற்கு சென்ற இளைஞர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி