தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

386பார்த்தது
தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஈரோடு மாவட்டம் மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணியாளர்கள் குழு பணியாளர்கள் என்று 1500 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்று இரண்டு மூன்று ஆகிய மண்டலங்களில் சம்பளம் மூன்றாம் தேதியே கொடுத்து விடுகின்றனர் நான்காவது மண்டலத்தில் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை இந்த நடவடிக்கையை ஏசி கிருஷ்ணமூர்த்தி தூய்மை பணியாளர்கள் பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு மாதமும் இவர் இதை செய்து கொண்டு வருகிறார். இதற்கு முன்னால் உள்ள மாதங்களில் 25 ஆம் தேதி தான் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்த போது அவர் இனிமேல் ஒன்றாம் தேதி முதல் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை சம்பளம் வழங்கப்படவில்லை இதனால் தூய்மை பணியாளர்கள் அக்டோபர் 7 இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி