ஈரோடு: தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

65பார்த்தது
ஈரோடு: தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கேட் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சோமு தலைமை வகித்தார். இதில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், டிரைவர்கள், மலேரியா தடுப்பு பணியாளர்கள் உட்பட குழு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, வரும் 11ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், மாநகராட்சியில் பணியாற்றி வரும் பணியாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி