ஈரோடு மாநகராட்சியில் ஏ. டி. எஸ். வகை கொசுக்கள் வாயிலாக, டெங்கு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்த தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், வார்டுகளுக்கு நேரடியாக சென்று கொசுக்களை கட்டுப்படுத்தவும், டெங்கு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் கழிவுநீரை அகற்றுவதோடு, கொசு புகை மருந்து அடித்தும், மருந்து தெளித்தும் வருகின்றனர்.