ஜூன் 10-இல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

61பார்த்தது
ஜூன் 10-இல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஜூன் 10-இல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் இதர குறை தீர்க்கும் முகாம்கள் மீண் டும் வரும் 10- ஆம் தேதி முதல் வழக்கம்போல தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 16- ஆம் தேதி வெளி யிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டதால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்கிழமை நடை பெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் இதர குறை தீர்க்கும் முகாம்கள் தற்காலிக மாக நிறுத்திவைக்கப்பட்டது.

இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட் டுள்ளதால் வரும் 10- ஆம் தேதி முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற் றும் அனைத்து குறைதீர்க் கும் கூட்டங்களும் வழக்கம் போல தொடர்ந்து நடை பெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி