மாயமான சரக்கு வாகனம் மீட்பு

378பார்த்தது
ஈரோடு மாவட்டம் சித்தோடு எல்லிஸ் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. இவர் அதே பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் சரக்கு வாகன டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் கோழி பண்ணை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் மாயமானது இதைக் குறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி சரக்கு வாகனத்தை திருடிய பூபதி என்பவரை இன்று கைது செய்து வாகனத்தில் மீட்டனர் பின்னர் பூபதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஈரோடு சப் ஜெயிலில் ரீமாண்ட் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி