கடையை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது

2286பார்த்தது
ஈரோடு வெட்டுக்காட்டு வலசு மடிக்காரர் காலனியில் சரவணன் என்பவர் கிருத்திகா ட்ரை கிளினர்ஸ் என்ற பெயரில், துணி சலவை மற்றும் அயர்னிங் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 4 ம் தேதி கடையில் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்ற அவர், மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது கடையின் முன் பக்கம் சட்டர்கள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, மின் கட்டணம் செலுத்துவதற்காக கடையில் வைக்கப்பட்டு இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரிய வந்ததுள்ளது. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார், தடயங்களை சேகரித்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக சூரம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் ஏற்கெனவே தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி