விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
விசிக துணை பொதுசெயலாளர் வன்னியரசு பேட்டி:
நடைபெறவுள்ள 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஈவிஎம் இயந்திரம் மூலம் பாஜக முறைகேடுகள் செய்ய முயற்சி செய்து வருகிறது இதை கண்டித்தும் இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக விற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை, அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தை அழித்து ஒழிக்கும் வகையில் பாஜக தேர்தல் ஆணையத்தை திருத்தம் செய்து உள்ளது, ஈவிஎம் இயந்திரம் முன்பு ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது தற்போது தனியார் நிறுவன கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி கருத்துக்கு இதுவரை மத்திய அரசு பதில் சொல்லவில்லை அதே போன்று தேர்தல் தலைமை ஆணையரை தேர்வு செய்யும் பொறுப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி விடுவிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது
திருமாவளவன் அறிவித்துள்ளபடி நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பொது தொகுதி உட்பட நான்கு தொகுதியை திமுகவிடம் போராடி பெறுவோம்,
எடப்பாடி பழனிசாமி முதலில் அதிமுகவில் இருந்த சசிகலா, ஓபிஎஸ் போன்ற பிரிந்து சென்றவர்களை சேர்க்கட்டும், திமுக கூட்டணி வலிமையாக, வலுவாக உள்ளது,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி