ஈரோட்டில் கேஎம்சிஹெச் அதிநவீன டயனாஸ்டிக் மையம் திறப்பு விழா

51பார்த்தது
ஈரோட்டில் கேஎம்சிஹெச் அதிநவீன டயனாஸ்டிக் மையம் திறப்பு விழா
கேஎம்சிஹெச் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அதிநவீன டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா ஈரோட்டில் கேஎம்சிஹெச் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது. தற்போது, மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் கேஎம்சிஹெச் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்திலேயே அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய டயக்னாஸ்டிக் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சு. முத்துசாமி பங்கேற்று ரிப்பன் வெட்டி டயக்னாஸ்டிக் மையத்தினை திறந்து வைத்தார். விழாவில், கே. இ. பிரகாஷ் எம்பி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஒன்றிய செயலாளர் கே. பி. சாமி மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி