ஈரோடு மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை களில், மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 60 வார்டு பகுதிகளிலும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், செவிலியர், களப்பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை மற்றும் புள்ளிவிவர சேகரிப்பு பணியில், தீவிரம் காட்டி வருகின்றனர்.
களப்பணியாளர்கள், தினசரி, 100 முதல் 150 வீடுகள் வரை சென்று
மக்களை சந்தித்து, குடும்பத்தினரில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கேட்டு தெரிந்து பதிவு செய்கின்றனர். ஒரு வேளை காய்ச்சல் பாதிப்பு இருந்தால், ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்ல அறிவு றுத்துகின்றனர். அதேசமயம் சுகாதார ஊழியர்கள் மூலம், வார்டுகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.