ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கண்காணிப்பாளர் அனிஸ் சோப்ரா ஐ. ஏ. எஸ் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஆணையாளர் மனிஷ் மணிஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சென்னையில் இருந்து வந்த கண்காணிப்பு அலுவலர் அனிஷ் சோப்ரா ஐ. ஏ. எஸ், மாநகராட்சியில் நடந்த வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, வைராபாளையத்தில் உள்ள உரக்கிடங்கில், உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நேரு வீதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், குடிநீரின் தரம் மற்றும் குடிநீரின் அளவு குறித்து சோதனை மேற்கொண்டார்.
பின்னர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு நேரு வீதி, 20வது வார்டு குமிலன்குட்டை, 19வது வார்டு கணபதி நகர், 39வது வார்டு சேக்கிழார் வீதி உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, தெரு விளக்குகள் உள்ளிட்டவைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆணையாளர் மனிஷ், தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலருடன் உடனிருந்தனர்.