சிறுமி பாலியல் பலாத்காரம் - முதியவர் கைது

9315பார்த்தது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பாலக்கரை தோப்புபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளர் தம்பதியினரின் 6 வயது மகள் அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டின் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்கிற ஆரான் என்ற முதியவர், ஆட்டுப்பட்டிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகம் என்கிற ஆரானை பெருந்துறை காவல்நிலையத்திற்கு நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆறுமகன் என்கிற ஆரானை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி