ஈரோடு நகரில் சாக்கடை கால்வாய் தூர் வரும்பணி நடைபெறுகிறது

58பார்த்தது
ஈரோடு நகரில் சாக்கடை கால்வாய் தூர் வரும்பணி நடைபெறுகிறது
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முனிசிபல் காலனியில், 13வது நாளாக சாக்கடை கால்வாய்கள் தூர் வாரப்பட்டு வரும் நிலையில், அப்பணிகள் எப்போது முடியும் என்ற கேள்வி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் மழைக்காலங்களில் அதிகப் பாதிக்கும் பகுதியாக, 28வது வார்டுக்கு உட்பட்ட முனிசிபல் காலனி உள்ளது. அதாவது, அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் மீது, கான்கிரீட் மற்றும் சிமென்ட் பலகை கொண்டு, பல இடங்களில் மூடப்பட்டதால், அவற்றில் குப்பை தேங்கி, மழைநீர் வெளியேற வழியில்லாத நிலை இருந்தது.
இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, கால்வாய்களை எவ்வாறு தூர்வாருவது என்பது குறித்து ஆலோசித்தனர்.
தொடர்ந்து, 2வது மண்டலத்துக்கு உட்பட்ட 25க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கொண்டு, கால்வாய்களை தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. 3 நாட்களிலேயே முடித்து விடலாம் என அதிகாரிகள் எண்ணிய நிலையில், தற்போது 13வது நாளாக தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.
சாக்கடை கால்வாய்களில் அள்ள அள்ள மண்ணும், பிளாஸ்டிக் கழிவுகளும் வருவதால், தூய்மை பணியாளர்கள் திணறி வருகின்றனர்.
அதே நேரத்தில், தூர் வாரும் பணியால், முனிசிபல் காலனி ரோட்டில், போக்குவரத்து பாதிக்கப்படுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மத்தியில், அப்பணிகள் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி