கழிவு நீரை சுத்திகரித்து, விவசாயிகளுக்கு வழங்க முடிவு

58பார்த்தது
கழிவு நீரை சுத்திகரித்து, விவசாயிகளுக்கு வழங்க முடிவு
ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரித்து, விவசாயிகளுக்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
ஈரோடு மாநகராட்சியில் கடந்த 2008ம் ஆண்டு முதல், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. பாதாள சாக்கடை கழிவு நீரை, சுத்திகரிப்பு நிலையத்தின் வாயிலாக, சுத்திகரிக்கப்படுகிறது. தினசரி 25 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்டு, காவிரி ஆற்றில் விடப்படுகிறது.
இந்நிலையில், சுத்திகரிக்கப்படும் நீரை, காலிங்கராயன் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் இருக்கும் விளை நிலங்களுக்கு, இலவசமாக வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து ஒரு சில நாட்களில், விவசாயிகளிடம், மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை நடத்த உள்ளது.
இதனிடையே, பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய, பல்வேறு கெமிக்கல் பயன்படுத்துவதால், அந்நீரை பெற விவசாயிகள் முன் வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
===

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி