நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும்
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியினர்
காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புகைப்படத்தை 10தலைக்கொண்ட இராவணன் போல் சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஈரோடு
காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்டம் சார்பில் சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் நடைபெற்ற மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பாஜக அரசு எதிர்த்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.