பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவேற்றம் செய்யக்கோரி
ஈரோடு மாநகராட்சி ஆணையர் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும், தாராளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: -
ஈரோடு மாநகராட்சியில் 1890-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மொத்தம் 6 லட்சத்து 28 ஆயிரத்து 590 பிறப்பு பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் 2001 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 568 பிறப்பு பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் 45 ஆயிரத்து 631 பிறப்பு பதிவுகள் பெயர் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது.
எனவே தங்களது கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்யப்படாமல் இருப்பின் விடுபட்டுள்ள பெயர் பதிவுகளை தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு விதிகள் 2000-ன்படி பெயர் பதிவு செய்ய வருகிற டிசம்பர் மாதம் 31-ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே தாங்கள் பிறப்பு சான்றிதழ் எந்த அலுவலகத்தில் பெற்றேர்களோ அந்த அலுவலகத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்ய வேண்டும் என மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.