காவிரி ஆற்று முகப்பினை படித்துறை, பூங்கா, படகு இல்லம்

82பார்த்தது
காவிரி ஆற்று முகப்பினை படித்துறை, பூங்கா, படகு இல்லம்
ஈரோடு மாநகராட்சி கழிவு நீர் காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க, அதனை சுத்திகரிப்பு செய்யவும், காவிரி ஆற்று முகப்பினை மேம்படுத்திடவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவிரி ஆறு முகப்பு மேம்படுத்தப்படும் என கடந்த மார்ச் 13ம் தேதி, தமிழக அரசு அறிவித்திருந்தது. தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் காவிரி ஆற்றில் பிரதானமாக கழிவு நீர் கலக்கும் இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏதுவான இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதில், மாநகர பகுதியில் 9 இடங்களை ஆய்வு செய்து, இப்பணிகளை செய்ய 2 தனியார் நிறுவனங்கள் திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர்.
இதே திட்டத்தில் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து காவிரிக்கரையில் சுமார் 1 கி. மீட்டர் தூரத்திற்கு காவிரி ஆற்றின் முகப்பினை மேம்படுத்திடவும் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான திட்ட வரைபடம், அதில் உள்ள சிறப்பம்சங்கள் அரசு உறுதி செய்து, நிதி ஒதுக்கியதும் இப்பணிகள் துவங்கப்பட உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி