உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

70பார்த்தது
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
ஈரோட்டில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ராஜேகோபால் சுங்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.


உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கி இந்த விழிப்புணர்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் நிறைவடைந்தது. 200க்கும் மேற்பட்ட செவிலிய மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியின் போது, உலக மக்கள் தொகை குறித்தும், மக்கள் தொகை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். முன்னதாக மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டதோடு, உறுதி மொழியும் ஏற்க்கப்பட்டது. மேலும் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு, விழிப்புணர்வு கையேடுகள் வெளியிடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி