கொங்கு மண்டலத்தை குறிவைத்து திருடும் குற்றவாளி போலீசார் கைது.
தற்போது திருப்பூர் மாநகரம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பள்ளியில் தலைமைஆசிரியர் அறையை உடைத்து பணம் திருடப்பட்டது. இது சம்பந்தமாக நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற வழக்கின் எதிரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு. திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. பிரவீன்குமார் அபினபு IPS அவர்களின் உத்தரவின்பேரில் நல்லூர் காவல்நிலையம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள் தனிபடை அமைத்து கொள்ளையனை கண்டுபிடிக்க 50க்கு மேற்ப்பட்ட கேமராகளை ஆய்வு செய்ததில், அவன் பழங்குற்றவாளி என உறுதி செய்தும் கைவிரல் ரேகை மேட்ச் ஆனது. திண்டுக்கல் ஸ்பெஷல் டீம் உதவி ஆய்வாளர் அவர்களை தொடர்புகொண்ட போது குற்றவாளியின் விபரம் கொடுத்தார். செல்வம் 35 , தகப்பனார் பெயர் சுப்பையா திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தற்போது வசிக்கும் இடம் ஊத்துக்குளி என்ற தகவலின் படி குற்றவாளியை கண்டுபிடித்து
மேலும் விசாரித்தபோது திண்டுக்கல் , ஈரோடு, வடமதுரை மற்றும் பழனி , கீரனூர் பகுதியில் திருடிய தகவல் தெரியவந்தது. பிறகு வழக்கின் சொத்தை மீட்டெடுத்தும் எதிரியை கைது செய்தும் நல்லமுறையில் விசாரணை முடித்தும் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒப்படைத்து நீதிபதியின் உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.