ஈரோடு மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் வகையில் வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பது தொடர்பாக கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்டோபர் 8 இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குழந்தைவேலு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகன் நாமக்கல் மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.