ஈரோடு: மாடியில் இருந்து விழுந்த சிறுமி பலி

53பார்த்தது
ஈரோடு: மாடியில் இருந்து விழுந்த சிறுமி பலி
மொடக்குறிச்சி அடுத்த சோலார் புதூர் எம். ஜே. ஆர் நகரைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகள் கோகிலவாணி (12). இவர் 8ம் வகுப்பு படித்து வந்த இச்சிறுமி, கடந்த 8ம் தேதி வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். தடுப்பு சுவர் இல்லாததால், மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த கோகிலவாணி, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி நேற்று  (ஜூன் 11) உயிரிழந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி