ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் வக்கீல் தோட்டம் பகுதியில், கொல்லிமலை சித்தரிடம் சென்று செய்வினை செய்வது எப்படி? பில்லி சூனியம் செய்வது எப்படி எனக் கற்றுக்கொண்டு வந்ததாகக் கூறி தன்னை ஒரு மந்திர தந்திரவாதியாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். பின்னர் அந்த ஆசாமி பில்லி, சூனியம், ஏவல் போன்ற வித்தைகளை காட்டி மக்களை பயமுறுத்தி கல்லா கட்டுகிறார். அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி செயற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.