ஈரோட்டில் அனுமன் ஜெயந்தியையொட்டி 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனுமன் ஜெயந்தி விழா வருகின்ற திங்கட்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈரோடு வ. உ. சி. பூங்கா மைதானம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் கோவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனுமன் ஜெயந்தி விழாவில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக ஈரோட்டில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஆஞ்சநேயர் வார வழிபாட்டு குழு சார்பில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் நடைபெற்று வரும் இந்த பணியில் சுமார் 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளதாக குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.