சத்தியமங்கலம் அருகே பேருந்து நிலையம் பின்புறம் செயல்பட்டு வரும் 11 மணி முதல் 11 மணி வரை இயங்கும் தனியார் டாஸ்மார்க் பாரில் இளைஞர்கள் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம் செயல்பட்டு வரும் தனியார் 11மணி முதல் 11 மணி வரை இயங்க கூடிய ரோஸ் மனமகிழ் மன்றம் என்ற தனியார் மதுபான கடை போன்று அமைந்துள்ளது. இந்த பாரில் இளைஞர்கள் அடிதடி தகராறு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் பாரின் மது அருந்து வந்த இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தடுத்தும் அவர்கள் ஒருவர் ஒருவரை சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இரவு நேரங்களில் இது போன்று பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள தனியார் மதுபான பாரில் அடிக்கடி அடிதடி சண்டைகள் ஏற்படுவதாகவும் இதனால் பேருந்து நிலையம் வரும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சமடைவதாகவும் உடனடியாக பிரச்சனைக்கு உரிய தீர்வு கண்டு தனியார் பாரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.