சத்தியமங்கலம் அருகே சுவர் விழுந்து தொழிலாளி பலி

64பார்த்தது
சத்தியமங்கலம் அருகே சுவர் விழுந்து தொழிலாளி பலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஊராட்சி அலுவலக் கட்டிடத்தை இடிக்கும் போது கட்டிடச் சுவர் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சத்தி அடுத்த கேர்மாளம் ஊராட்சி அலுவலகத்தின் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், பழைய கட்டி டத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.
கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடம்பூர், மாக்கம்பாளையத்தைச் சேர்ந்த சிக்குமாதன் (45) என்ற தொழிலாளி வேலை பார்த்து கொண்டு இருந்தபோது, திடீரென சுவற்றின் ஒரு பகுதி இடிந்து மாதன் மேல் விழுந்ததில் பலத்த காயம் அடைத்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆசனூர் போலிசார் செய்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி