சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக் குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்ப டுகின்றன. இந்த நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து ஆண் யானை வெளியேறி தாளவாடியை அடுத்த கும் பாரகுண்டி கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த காட்டு யானை அங்குள்ள சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றது.
இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஒரு சிலர் மறைந்து நின்றபடி யானை நடந்து சென்ற காட்சியை வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த காட்டு யானை, பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.