பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

70பார்த்தது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர், தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு உயரம் 105 அடியாகும். அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர்
அணைக்கு வருகிறது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து
361கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 82. 6
அடியாக இருந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு 6 ஆயிரத்து 965 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம். 82. 61 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி