புளியம்பட்டியில் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் இருந்து பவானிசாகர் செல்லும் சாலையில் கரூர் வைசியா வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கிக்கு பணம் செலுத்த வந்த நபர் ஒருவர் தனது டிவிஎஸ் எக்ஸ். எல் வாகனத்தை வங்கியின் முன்பு நிறுத்தி விட்டு சைடு லாக் செய்யாமல் பேங்குக்குள் சென்றுள்ளார்.
இதை கண்ட அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்தவாறு சிறிது நேரம் கழித்து அந்த வாகனத்தை திருடி சென்றுள்ளார்.
இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ள நிலையில் புஞ்சைபுளியம்பட்டி பகுதி முழுவதும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் காவல்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.