சதுமுகை ஊராட்சியை சத்தி நகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சதுமுகை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபா கூட்டம் சதுமுகை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் சதுமுகை ஊராட்சி அலுவலகம் அருகே நடை பெற்றது. இந்நிலையில் சதுமுகை ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கருப்பு பேட்ச் அணிந்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல சம்பவயிடத்திற்கு சென்ற சத்தி யூனியன் சேர்மேன் இளங்கோ, காவல் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் கலெக்டரிடம் மனு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.