சத்தியமங்கலத்தில் போதை ஊசி போட்டுக்கொண்ட மாணவர் மயக்கம்

54பார்த்தது
சத்தியமங்கலத்தில் போதை ஊசி போட்டுக்கொண்ட மாணவர் மயக்கம்
சத்தியமங்கலம், கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 24). இவர் தன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கல்லூரி மாணவர் ஒருவரை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு அழைத்து வந்து போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து மாணவரிடம் கொடுத்துள்ளார். மேலும் இதை கையில் போட்டுக்கொள் நன்றாக இருக்கும் என்று கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் மாணவரும் அந்த ஊசியை போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 98 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி