சத்தி ஐயப்பன் கோயில் ஆண்டு விழா நடைபெற்றது

1பார்த்தது
சத்தி ஐயப்பன் கோயில் ஆண்டு விழாவையொட்டி திருவிளக்கு ஏந்தி சென்ற பெண்கள்.

சத்தியில் ஐயப்பன் பொற்கோவில் 8ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து உதயா ஸ்தமன பூஜை, விநாயகருக்கு உற்சவ சடங்கு, ஐயப்ப சாமிக்கு களபாபிஷேகம், முருகனுக்கு சிறப்பு பூஜை, விழாவின் கடைசி நாளான நேற்று எஸ்ஆர்டி கார்னர் அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து ஐயப்ப சுவாமி சர்வ அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் பெண்கள் விளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் சிங்காரி மேளம், செண்டை மேளத்துடன் பக்தர்கள் புடை சூழ இரவு கோயிலை அடைந்தது. ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஐயப்பா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you