ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினர் இணைந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பசு மற்றும் காளை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை நடத்தினர்.
சிக்கரசம்பாளையம் அருகே உள்ள பீக்கிரிபாளையம் கிராமத்தில் கவுந்தப்பாடி கால்நடை டாக்டர் செல்வராஜ் தலைமையில் 150 பசு மற்றும் காளை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த பணியில் சிக்கரசம்பாளையம் கால்நடை மருத்துவமனை கால்நடை உதவியாளர் திரு வேங்கடம், உதவியாளர் ராபின்சன், கால்நடை செயற்கை கருவூட்டல் பணியாளர் விஜயகுமார், கால்நடை பராமரிப்பு மற்றும் வனத்துறை கால்நடை ஆய்வாளர் வீரக்குமார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.