சத்தியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தி நகராட்சிக்குட்பட்ட பெரிய கோவிலில் இருந்து கோட்டு வீரம்பாளையம் வரை செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருப்பதால் இந்த வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதனால் சாலையை சரி செய்ய கோரி அப்பகுதி பொது மக்கள் நகராட்சிக்கு பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் சாலை போடாமல் குழிகளுக்கு மண்ணை
வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதால் டிரைவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள், நோயாளிகள் ரோட்டில் நடமாட முடியாத நிலை உள்ளது. மேலும், வீடுகளில் தூசு படுவதால் சுகாதாரகேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.