பவானிசாகர்அருகே பென்சனர்கள் தின விழா

68பார்த்தது
பவானிசாகர்அருகே பென்சனர்கள் தின விழா
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே பென்சனர்கள் தின விழா அகில இந்திய மூத்த குடிமக்கள், பென்சனர்கள் கூட்டமைப்பு, மற்றும் பவானிசாகர் வட்டாரக் கிளை சார்பாக பென்சனர்கள் தின விழா நடைபெற்றது.

 பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு செயலாளர் சவுரிமுத்து தலைமை ஏற்றார். மாநில பொருளாளர் ராமசாமி, மாவட்ட நிர்வாகிகள் பூபதி, வேலுசாமி, சுந்தரம், சுப்பிரமணியன், தங்கவேல்முருகையன் ஆகியோர் பேசினர். வட்டார தலைவர் ஆசிரியர் கந்தசாமி தலைமை உரையாற்றினார். வட்டாரப் பொருளாளர் வரதராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். 

இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இலவச கண்பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், 70, 80, 85, மற்றும் 90 வயது நிரம்பியவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. முன்னதாக துணைத்தலைவர் காண்டீபன் வரவேற்றார். குமரவேல் நன்றி கூறினார். இதில் பவானிசாகர், மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட பென்சனர்கள் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி